புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அரிய வகை மரபணுப் பிரச்சினையால் 16 வயதேயான சிறுமி ஒருவர், 60 வயது மூதாட்டி போல காட்சி தருகிறார்.

இருப்பினும் முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை மூலம் அவரது முகத்தின் சுருக்கம் ஓரளவு நீக்கப்பட்டு ஓரளவு இளமையான முகத்தைப் பெற்றுள்ளார்.

அந்தப் பெண்ணின் பெயர் ஸாரா ஹார்ட்ஷார்ன். 16 வயதான இவர் தெற்கு யார்க்ஷயரில் உள்ள ரோதர்ஹாம் நகரைச் சேர்ந்தவர். இவருக்கு பிறவியிலேயே அரிதான மரபணுப் பிரச்சினை இருந்தது.

இதனால் வயதுக்கேற்ற முகமாக இல்லாமல், வயதானவர்களைப் போன்ற முகம் இவருக்கு உருவானது. இவரது தோல் சுருங்கி, வயதானவர்களுக்கு இருப்பதைப் போல மாறி விட்டது. இவரது தாய் டிரேசி ஜிப்சனுக்கும் இதேபோன்ற பிரச்சினை உள்ளது.

இதனால் தாயும், மகளும் வெளியுலகில் அதிகம் தலை காட்டத் தயங்கி வீட்டுக்குள்ளேயே பல நாட்கள் முடங்கிக் கிடந்த அவலம் நடந்துள்ளது.

இந்த நிலையில் ஸாராவின் பிரச்சினை குறித்து தெரிய வந்து அமெரிக்க அறுவைச் சிகிச்சை நிபுணர் ஒருவர் ஸாராவுக்கு முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை செய்து பிரச்சினையை சரி செய்யலாம் என நம்பிக்கை அளித்தார். அத்தோடு நிற்காமல் அதை இலவசமாகவும் செய்து கொடுத்தார்.

இதையடுத்து ஸாராவின் முகம் நிறைய மாறி விட்டது. முதுமை கிட்டத்தட்ட நீங்கி பார்க்க பரவாயில்லை என்ற அளவுக்கு வந்துள்ளார். இதனால் பெரும் மகிழ்ச்சியில் பூரித்திருக்கிறார் ஸாரா.

தற்போது இவருக்கு ஒரு பாய் பிரண்ட் கூட கிடைத்துள்ளார். அவரது பெயர் ரிக்கி ஆண்ட்ரூஸ்.மேலும் கல்லூரிக்குப் போகவும் தயாராகி வருகிறார்.

எப்போதும் அழுதபடி காணப்பட்ட ஸாரா இப்போது அதிக நம்பிக்கையுடன் வலம் வருகிறார்.

12 வயது இருக்கும்போதுதான் தனது பிரச்சினையின் வீரியத்தையும், தீவிரத்தையும் உணர்ந்தார் ஸாரா. அப்போது அவர் வெளியில் போகும்போது நடுத்தர வயதுப் பெண் போல காணப்பட்டார். பலர் அவரைக் கேலி செய்தனர். வீட்டிலேயே கூட அவர் புறக்கணிக்கப்பட்டார்..

ஆனால் தற்போது அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பெரும் புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறார் ஸாரா.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top