புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நைஜீரியாவை சேர்ந்த நபர் ஒருவர் உறையும் குளிர் உள்ள கடலில் இரண்டு நாட்கள் உயிரோடு இருந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த மே மாதம் 26 ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலில் ஜாஸ்கான்- 4 என்ற இழுவைப்படகு தலைகீழாகக் கவிழ்ந்தது. அந்தப் படகில் இருந்த 12 பேரும் கடலுக்குள் மூழ்கினர்.

இச்சம்பவத்தை அடுத்து கடலுக்குள் மூழ்கிய படகில் இருந்தவர்களின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்ட நீச்சல் வீரர்கள் இறந்துபோன 10 பேரின் உடல்களை மீட்டனர்.

மற்ற இரண்டு பேரைக் காணவில்லை என்று தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதில் ஒருவரான, ஹாரிசன் ஓகேன் (29) என்பவர் இரண்டு நாட்கள் கடலுக்குள் உறையும் குளிரில் உயிரோடு இருந்தது தெரியவந்தது.

கவிழ்ந்த படகில் இருந்த ஒரு அறைக்குள் இருந்த அவர் அங்கிருந்த கழிவறையின் மேல்புறம் வழியாக தண்ணீர் ஏறத்தொடங்கிய போது, அங்கு உருவாகியிருந்த நான்கடி விட்டமுள்ள காற்றுகுமிழினால் சுவாசித்துக்கொண்டிருந்தார்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் தென்னாப்பிரிக்க நீச்சல் வீரர்கள் அவரைக் காப்பாற்றினர். இரண்டு நாட்கள் உப்புத் தண்ணீரில் இருந்ததால் அவரது தோலின் மேல்பாகங்கள் பல இடங்களில் பிய்ந்து விட்டன.

ஆயினும், கடலுக்குள் இரண்டு நாட்கள் சிக்கியும், காப்பாற்றப்பட்டதை அறிந்து அவர் மிக்க மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

இதுகுறித்து தெரிவித்த ஹாரிசன், இந்த மாதிரி ஒரு சூழலை நான் எனது வாழ்நாளில் சந்தித்ததே இல்லை. என்னுடன் பயணம் செய்த மற்றவர்களின் உடலை மீன்கள் உண்பதை என்னால் கேட்கமுடிந்தது. நானும் இறந்திருப்பேன் என்றுதான் நினைத்தேன் ஆனால் நான் உயிரோடு இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top