புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அமெரிக்காவில் உள்ள 10 வயது சிறுமி Sarah Murnaghan என்ற சிறுமிக்கு நுரையீரல் கோளாறு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


அவருக்கு உடனடியாக நுரையீரல் மாற்று ஆபரேசன் செய்ய டாக்டர்கள் முடிவெடுத்தனர். சிறுமி சாராவுக்கு 30 வயதுக்கு மேற்பட்ட நபரின் நுரையீரல் தானமாக பெறப்பட்டது. ஆனால் இதை அவளுக்கு பொறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

அமெரிக்க சட்டப்படி சிறுவர்களுக்கு பெரியவர்களின் உடல் உறுப்புகள் பொருத்தக் கூடாது. அவ்வாறு பொறுத்துவதாக இருந்தால் அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

சிறுமியின் உயிரை காப்பாற்ற அமெரிக்க அரசு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என சுமார் 3 லட்சத்து 72 ஆயிரம் பேர் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே, அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து சாராவின் பெற்றோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ஆய்வு செய்த கோர்ட் சிறுமியின் உயிரை காப்பாற் மாற்று நுரையீரல் ஆபரேசனுக்கு அனுமதி வழங்கியது.

சிறுமி சாராவுக்கு உடனடியாக ஆபரேசன் மூலம் நுரையீரல் மாற்று ஆபரேசன் அவரது உயிரை மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top