புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சந்திரன் எவ்வாறு உருவாகியது என்பது தொடர்பில் நீண்டகாலமாக விவாதம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் பூமியிலிருந்து தான் அது தோன்றியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


பூமியின் கருவிலிருந்து சுமார் 4 1/2 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் வெடிப்பு இடம்பெற்றதாகவும் இதன்காரணமாகவே சந்திரன் தோன்றியதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த வெடிப்பானது சுமார் 40 பில்லியன் அனுகுண்டுகளுக்கு சமனானதெனவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எம்ஸ்டர்டேர்லுள்ள வி.யு. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியல் துறைசார் விஞ்ஞானியான விம் வேன் வெஸ்ட்ரெனன் என்பவரே இப் புதிய ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார்.

சந்திரன் எவ்வாறு உருவாகியது தொடர்பாக பல வருடங்களாக பல்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எனினும் தற்போது விம் வேன் வெஸ்ட்ரெனனின் கருத்துப்படி சந்திரன் ஆனது பூமியின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் ஆனால் 4 1/2 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெடிப்பின் போது அது பிரிந்து விண்வெளிக்குச் சென்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு ஒரு வெடிப்பு இடம்பெறுவதற்கு ஹிரோஷீமாவில் போடப்பட்டதை விட 40 பில்லியன் அனுகுண்டுகளுக்கு சமமான சக்தியுடன் கூடிய வெடிப்பொன்று இடம்பெற்றிருக்க வேண்டுமென்று அவர் தெரிவித்துள்ளார்.
 
Top