புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கணனி மவுசை கண்டுபிடித்த டக்ளஸ் எங்கல்பர்ட் சிறுநீரக பாதிப்பு காரணமாக மரணமடைந்தார்.
கடந்த 1925ம் ஆண்டு போர்ட்லாண்டில் பிறந்தவர் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி டக்ளஸ் எங்கல்பர்ட்.


1960களில் ஆகுமென்டேசன் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிய போது, கணனியை எளிமையாக பயன்படுத்தும் வகையில் மவுஸை கண்டுபிடித்தார்.

இதன் மூலம் கணனியின் பயன்பாடு சாதாரண மக்களிடமும் பிரபலமானது.

அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் தனது மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த டக்ளஸ், சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை அவர் உடல்நிலை மிகவும் மோசமடையவே, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
Top