புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்.மாவட்டத்தில் 2011 ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து டிசெம்பர் 20ஆம் திகதி வரையில் 36 தற்கொலை மரணங்கள் நடைபெற்றுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை மரண பதிவு மற்றும் மரணங்கள் தொடர்பான விசராணை அறிக்கையின் புள்ளிவிபரத் தரவுகள் குறிப்பிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்கொலை மரணங்கள் தொடர்பான பதிவுகளின் படி 24 பெண்களும் 12 ஆண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்தப் புள்ளிவிபரத் தரவு அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையின் தற்கொலை மரண அறிக்கையின் பிரகாரம் இளவயது குடும்பத்தினர் அதிகமாக இருப்பதாகவும், இவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை எதிர்நோக்கியதாகவும்,

குடும்பப் பிணக்கு அல்லது மன அழுத்தம், தாங்க முடியாத அதிர்ச்சி, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை, விரக்தி போன்ற காரணங்களாக இவர்களின் தற்கொலை அமைந்திருக்கலாம் என தற்கொலைக்குப் பின்னரான மரண விசாரணை அறிக்கை குறிப்பிடுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top