கனடாவின் வின்ஸ்டர் பகுதியில் டிரைவர் ஒருவர் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் போது நெஞ்சு வலியால் துடித்து இறந்தார். அவர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள வேலியில் மோதி தீப்பிடித்தது.காரை கிளவர் அவென்யூ அருகே வேகமாக ஓட்டிக்கொண்டிருந்த போது திடீரென நெஞ்சு வலியால் துடித்தார். எனவே அவர் ஓட்டி
வந்த கார் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள ஒரு வேலி மீது மோதி நொறுங்கியது.
மோதிய வேகத்தில் காரின் பெட்ரோல் டேங்க் வெடித்து கார் தீப்பிடித்து எரிந்தது. உடனே அருகில் இருந்த காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த காவலர்கள் காரின் தீயை அணைத்து டிரைவரை வெளியே இழுத்து, அருகிலுள்ள பிராந்திய மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நெஞ்சு வலியால் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விசாரணை முழுமையாக முடிந்தபின்னர் டிரைவரின் உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கார் டிரைவரின் பெயரை வெளியிட காவல் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக