புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து இலங்கையர்களுக்கு விசா வழங்கும் முறையை இந்தனேஷியா இலகுவாக்கவுள்ளதாக ஜகார்த்தா போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.2012ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கு விஸா வழங்குவதை இலகுவாக்க உள்ளதாக
இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

13 நாடுகள் கொண்ட சிவப்பு பட்டியலில் இலங்கையையும் இந்தனேஷியா அடக்கியிருந்தது. இந்த 13 நாட்டவர்களாலும் இந்தனேஷியாவில் சட்டம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படலாம் என இந்தனேஷியா கருதியது.

எனினும், இலங்கையில் தற்போது பாதுகாப்பு மற்றும் பொருளாதார சூழல்களில் முன்னேற்றம் கண்டுள்ளதால் இலங்கையை சிவப்பு பட்டியலிலிருந்து நீக்க இந்தோனேஷியா முடிவு செய்துள்ளது.

இருப்பினும் வெளிநாட்டு அமைச்சின் இந்த தீர்மானத்தையிட்டு குடிவரவு திணைக்களம் மகிழ்ச்சியடையவில்லை. அவுஸ்ரேலியாவிற்குள் ஆட்களை கடத்துவோரும் புகலிடம் கோருவோரும்  இந்தோனேஷியாவை தங்கி செல்லும் இடமாக பயன்படுத்தலாம் என இந்தோனேஷிய குடிவரவு அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்படி இந்தோனேஷியாவுக்கு வந்தவர்களில் 10 சத வீதமானோர் மாத்திரமே வெளியேறியுள்ளனர். ஏனைய 90 சத வீதமானவர்கள் எங்கேயுள்ளனர் என்பது தெரியாமல் உள்ளது.

இதேவேளை, இந்தனேஷியாவில் அடைக்கலம் கோரும் 2,800 வெளிநாட்டவர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் அறிவித்ததுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top