புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சில நேரங்களில் நாம் கோப்புகளை மற்றவர்களுக்கு அனுப்ப விரும்புவோம். ஆனால் அதனை முழுவதையும் ஒரே கோப்பாக அனுப்ப முடியாது.அவ்வாறான சந்தர்பங்களில் நீங்கள் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம். இலவசமாக கிடைக்கப் பெறும் இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

இதை ஓபன் செய்தவுடன் ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் நீங்கள் எந்த கோப்பை பிரிக்க விரும்புகின்றீர்களோ அதனை தெரிவு செய்யுங்கள்.
அடுத்து அதனை எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தை தெரிவு செய்யுங்கள். அதன் கீழே நீங்கள் எவ்வளவு பாகங்களாக பிரிக்க விரும்புகின்றீர்களோ அதனை தெரிவு செய்யுங்கள். நீங்கள் கே.பி மற்றும் எம்.பி அளவுகளிலும் அதனை தெரிவு செய்யலாம். கடைசியாக இதில் உள்ள Split என்பதனை கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கான பணி முடிந்ததும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பனாகும். அதில் நீங்கள் கொடுத்த மென்பொருள் பிரிக்கப்பட்டு காணப்படும்.
இதனை எப்படி சேர்த்து பயன்படுத்துவது? அதற்கான வழிமுறைகளையும் இந்த வழங்குகின்றது. இதில் உள்ள Merge File கிளிக் செய்யவும். வரும் விண்டோவில் நீங்கள் சேர்க்க விரும்பும் கோப்பை தெரிவு செய்யவும்.
இப்போது இதில உள்ள மெர்ஜ் கிளிக் செய்யவும். உங்களுக்கான கோப்பு முழுமையாக கிடைக்கும். இதன் மூலம் கோப்புகளை மற்றவர்களுக்கு சுலபமாக அனுப்ப முடியும்.

வீடியோ, ஓடியோ கோப்புகள், டாக்குமேண்டுகள் என இதன் மூலம் அனைத்து விதமான கோப்புகளையும் பிரிக்க, சேர்க்க சுலபமாக முடியும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top