புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அன்னை தெரேசா சொல்லியிருகிறார் “ நீ எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கெல்லாம் அன்பை பரப்பு!” மைக்கேல் ஜாக்‌ஷன் சொல்லியிருகிறார் “ அன்பால் இந்த உலகை குணப்படுத்து!” எனவே நம் எல்லோருக்கும் தேவை லவ் அன்தம்! உலக
அமைதிக்கானது இந்த ‘லவ் ஆன்தம்’ என்ற வாசங்களோடு தொடங்கும் இந்த மியூசிக் வீடியோவில் ஒஸ்தி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சோஒனி மியூசிக் நிறுவனத்துகாக பாடி நடித்துக் கொடுத்திருந்தாராம் சிம்பு!

அந்தப்பாடலை சோனி மியூசிக் புத்தாண்டில் வெளியிட இருந்த நிலையில், தற்போது தனுஷீன் கொலவெறி பாடல் உலகையே கலக்கிக் கொண்டிருகிறது என்று சொல்லப்படுவதால் அதற்கு பதிலடியாக இதன்  முன்னோட்டத்தை இரண்டே முக்கால் நிமிடம் வெளியிடும்படி சிம்பு தரப்பு கேட்டுக் கொண்டதாகவும், அதனால் சோனி மியூசிக் நிறுவனம்  இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது என்று தகவல் கிடைக்கிறது.

ஆனால் தனது பேஸ்புக் பக்கத்தில் ” தொன்னூற்று ஆறு மொழிகளையும் பல கோடி மக்களையும் இணைக்க, தடைகளை உடைத்து, அனைவரும் உடையாத பந்தங்களாக.. இதோ.. உலக அமைதிக்காக ஒரு இந்தியனின் சிறு பங்களிப்பு ” என்று எழுதியிருகிறார் சிம்பு.  தனுஷ் பாடலுக்கு உங்களின் பதிலடியா இது என்று சிம்புவிடம் கேட்டால் “ அந்தப் பாடலோடு இதை தயவு செய்து ஒப்பிடாதீர்கள். கொலவெறிக்கு முன்பே ஒலிப்பதிவும், ஒளிப்பதிவும் முடிந்த பாடல் இது. இதன் நோக்கமே எந்த உயரத்தில் இருகிறது. தயவு செய்து இந்தப்ப்பாடலை அசிங்கப்படுத்தி விடாதீர்கள் என்கிறார் நம்மிடம்.

தொன்னூற்று ஆறு உலக மொழிகளில் காதல் என்ற உன்னதமான சொல்லின்  வார்த்தைகளை கொண்டு இந்தப்பாடலை உருவாக்கியிருகிறார்களாம். பாடலுக்கு இறுதி வடிவம் கொடுத்ததும் சிம்புதானாம். விரைவில் முழுமையான பாடலை வெளியிட இருகிறார்களாம் சோனி மியூசிக்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top