ஹோங்கொங் உட்பட பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் கூடுதலாக அதிவேக புல்லட் ரயில்கள். இந்த ரயில்களின் வேகம் மணிக்கு 500 கி.மீ வேகம் வரை செல்லக் கூடியதாக இருக்கும்.சீனாவின் தெற்கு பகுதியில் தொழிற்சாலை அதிகமுள்ள குவாங்ஷூ, சென்ஷன்
நகரங்களுக்கு இடையில் புதிய புல்லட் ரயில் (27.12.2011) முதல் இயக்கப்பட்டுள்ளது.
பின் இது ஹோங்கொங் வரை நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சீனாவின் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் மணிக்கு 500 கி.மீ வேகத்தில் செல்லக் கூடிய அதிவேக புல்லட் ரயில்கள் 36 உள்ளன.
கடந்த ஜீலை மாதத்தில் புல்லட் ரயில் ஒன்று விபத்தில் சிக்கவே, புல்லட் ரயில் சம்பந்தப்பட்ட புதிய திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
0 கருத்து:
கருத்துரையிடுக