புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவியை கடத்திச் சென்று, மதுரையில் பதுங்கியிருந்த கல்யாண மன்னனையும், அவரது இரண்டாவது மனைவி உள்ளிட்ட மூவரையும், வாழப்பாடி போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், மேச்சேரியை சேர்ந்தவர் குட்டி(எ) பரசுராமன், 35. அதே பகுதியை சேர்ந்த, சுமதியை திருமணம்
செய்தார். பின், கற்பகம் என்பவரை, இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கற்பகத்திற்கு, இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர்.

இதற்கிடையே, பிரியா என்ற பெண்ணை, திருமணம் செய்தார். ஒரு பெண் குழந்தைக்கு தாயான பிரியாவையும், பரசுராமன், "கழற்றி விட்டதாக' கூறப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன், வாழப்பாடி இந்திராநகர் பகுதியில் குடியேறிய பரசுராமன், பக்கத்து வீட்டில் வசித்த மங்கை, 18, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு, வலை விரித்தார். பி.பி.ஏ., முதலாமாண்டு படிக்கும் மாணவியான அவரை, திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டிய பரசுராமன், கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி, அவரை கடத்திச் சென்றார்.

மகள் கடத்தப்பட்டது குறித்து, அவரது தாய் காந்தி, வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். பின், மகளை கண்டுபிடித்து கொடுக்கக்கோரி, காந்தி, சென்னை ஐகோர்ட்டில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். பரசுராமனை பிடிக்க, வாழப்பாடி போலீசார் தனிப்படை அமைத்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்நிலையில், பரசுராமன், தன் இரண்டாவது மனைவி, குழந்தைகள் மற்றும் மாணவி மங்கை ஆகியோருடன், மதுரையில் பதுங்கியிருப்பதாக, வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மதுரை விரைந்த தனிப்படை போலீசார், கே.புதூர் பகுதியில் பதுங்கியிருந்த பரசுராமன், மனைவி கற்பகம், பரசுராமனின் அண்ணன் மகன் ரங்கநாதன் ஆகிய மூவரையும், கைது செய்தனர். மாணவி மங்கையை மீட்டு, வாழப்பாடிக்கு அழைத்து வந்தனர்.

பரசுராமன், கற்பகம், ரங்கநாதன் ஆகிய மூவரையும், சேலம் ஜே.எம். எண் 6 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். கல்லூரி மாணவி மங்கை, அரசு பெண்கள் விடுதியில் சேர்க்கப்பட்டார்.

மாணவியை கடத்திச் செல்ல உடந்தையாக இருந்ததாக பரசுராமனின் உறவினரான முருகன், வெள்ளையன் (எ) ராஜேந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top