புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இரண்டாவது மனைவியுடன் குடும்பம் நடத்த ரூ. 2 லட்சம் கேட்ட கணவரிடம் போலீசார் விசாரிக்கிறார்கள். திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (28). வெல்டர். இவரது மனைவி அஸ்வினி (20). கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது 15 சவரன் நகை, பைக் உள்ளிட்ட சீர் வரிசைகளை பெண் வீட்டார் கொடுத்தனர். திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்கு பிறகு பிரகாஷ் வீட்டிற்கு சரியாக வருவதில்லையாம். வேலை விஷயமாக கம்பெனியில் தங்கி விடுவதாக கூறி வந்துள்ளார். கணவரின் போக்கில் அஸ்வினிக்கு சந்தேகம் ஏற்பட்டது.  கடந்த மாதம் 21ம் தேதி பிரகாஷ், வீட்டிற்கு வந்துள்ளார். சந்தேகத்தில் அஸ்வினி, கணவரிடம் துருவி துருவி விசாரித்துள்ளார். இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பிரகாஷ் வீட்டை விட்டு வெளியேறினார்.

வீட்டில் பிரகாஷ் வைத்திருந்த பெட்டியில் பெரியபாளையம் கோயிலில் திருமணம் செய்து கொண்டதற்கான சான்றிதழ் இருந்தது. அதில் மணமகன் பெயர் பிரகாஷ், மணமகள் லதா என்று எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்து அஸ்வினி அதிர்ந்தார். விசாரித்ததில் அஸ்வினியை மணப்பதற்கு முன் மணலியை சேர்ந்த லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் மணலியில் தனிக்குடித்தனம் வைத்திருப்பதும் அவர்களுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை இருப்பதும் தெரிந்தது. இது பற்றி அஸ்வினியின் பெற்றோர் கேட்டபோது,  அஸ்வினியுடன் குடும்பம் நடத்த ரூ. 2 லட்சம் தரவேண்டும் என்றும் முதல் மனைவி லதாவை விட்டு பிரிய முடியாது என்றும் பிரகாஷ் கூறியுள்ளார். இது குறித்து அஸ்வினி, திருவொற்றியூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். பிரகாஷ், முதல் மனைவி லதா, அஸ்வினி ஆகியோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top