புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடிப் பகுதியைச் சேர்ந்த மனநலம் குன்றிய இளம் குடும்பப் பெண் நோயின் கொடுமை காரணமாக கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நீண்ட நேரம் தேடிய போது இந்தப்
பெண்ணுடைய சடலம் வயல் ஒன்றில் உள்ள கினற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

ரவிச்சந்திரன் சரோஜினி (வயது 44) என்ற பெண்ணே மரணமடைந்தவராவர். இந்தப் பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் யாழ்.பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top