ஆந்திர மாநிலத்தில் குண்டாக இருப்பதனால் மனமுடைந்த என்ஜினியர் ஒருவர் தீக்குளி்தது பரிதாபமாக இறந்தார்.ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் கே. சந்திரசேகர்(35). தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.அவருக்கும்,
பிரபாவதி என்ற பெண்ணுக்கும் கடந்த 3
ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்கள் மியாபூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு பிரபாவதி கர்ப்பமானார். இதையடுத்து அவர் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அதனால் சந்திரசேகர் வீட்டில் தனியாக இருந்தார். அவருக்கு தான் குண்டாக இருப்பது வருத்தத்தை தந்துள்ளது. எனவே, உடல் எடையைக் குறைக்க அவர் ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை பெற்று வந்தார். ஆயினும் எடை குறைந்தபாடில்லை.
இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். அவரது வீட்டில் இருந்து புகை வருவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்தனர்.அப்போது சந்திரசேகரின் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே அவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அவர் சுயநினைவின்றிக் கிடந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்தனர். அவர்கள் வந்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவி்ததனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மியாபூர் எஸ்ஐ கூறியதாவது, வீட்டில் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை.
அவரது படுக்கையறையில் மதம் மற்றும் பெண்கள் குறித்த சில குறிப்புகள் கிடைத்தன. ஆயுர்வேத மருத்துவத்தாலும் எடை குறையாததால் சந்திரசேகர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணம் மன அழுத்தம் தான் என்று நாங்கள் நினைக்கிறோம் என்றார்.

0 கருத்து:
கருத்துரையிடுக