புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நியூசிலாந்தில் ஏற்பட்ட பூகம்பத்திலிருந்து நடிகை வித்யாபாலன் உயிர் தப்பினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.பாலிவுட்டில் நடிகை வித்யாபாலன் நடித்து வெளியான தி டர்டி பிக்சர் திரைப்படம் அதிக வசூல் சாதனை படைத்து வெற்றிபெற்றது.இப்படத்தில் தமிழ் நடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சியாக நடித்து வித்யாபாலன் பரபரப்பு ஏற்படுத்தினார்.

நடிகை வித்யாபாலனும், அவரது காதலர் சித்தார்த் ராய் கபூரும் ஓய்வுக்காக நியூசிலாந்து சென்றுள்ளனர். அங்குள்ள கிறிஸ்ட் சர்ச் பகுதியில் தங்கியுள்ளனர்.பிறகு அங்கிருந்து குயீன்ஸ் நிலையத்திற்கு புறப்பட்டனர். அப்போது திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் வித்யாபாலன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் தங்கி இருந்த இடங்களும் சேதமடைந்தன.

அவர் புறப்பட்ட சில நிமிடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல் அறிந்ததும் வித்யாபாலன், சித்தார்த், குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தார்கள்.இதையடுத்து வித்யாபாலன்-சித்தார்த் இருவரும் தனது குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top