பெண் குழந்தை ஒன்றின் கொலையில் தகவல் பரிமாற்று ஊடகமாக ஸ்கைப் செயற்பட்டுள்ளது.நீர் நிறைந்த வாளி ஒன்றினுள் பெண் குழந்தையின் தலையை அமிழ்த்தி அதன் தாயார் மூச்சுத் திணற வைத்து கொன்றுள்ளார்.இந்தக் கோரக் காட்சிகளை அவளது பிரிட்டிஷ் ஆண் நண்பன் நேரடியாக இன்டர்நெட் மூலம் ஸ்கைப் வழியாகப்
பார்த்துள்ளார்.
பார்த்துள்ளார்.
நோர்வேயைச் சேர்ந்த Yasmin Chaudhry என்ற பெண் ஒரு வயதேயான தனது பெண் குழந்தையின் தலையை வாளியினுள் அமிழ்த்தி கொலை செய்துள்ளார்.குழந்தையைக் கொலை செய்யும் நேரடிக் காட்சிகளை அதிகாலை மூன்று மணியளவில் இன்டர்நெட் மூலம் ஸ்கைப் வழியாக தனது காதலனுக்கும் காட்டியுள்ளார்.
குழந்தையின் அப்பா யார் என்பதில் நிலவிய சிக்கலே கொலையில் முடிந்துள்ளது. Scotland Yard பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் வழக்கறிஞர் கருத்துத் தெரிவிக்கையில்,எங்களிடம் இதே கதை ஏற்கனவே உள்ளது... ஆனால் சிறிய வேறுபாட்டுடன்..
தான் ஒழுக்கமானவள் என்பதை நிரூபிக்கவே இப்படியான கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.தவறுதலாக குழந்தை வாளியினுள் விழுந்துள்ளதாக அம்புலன்ஸ் வாகனத்துக்கு தொலைபேசியில் பேசிய கொலைகாரப் பெண் தெரிவித்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக