புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்.வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சமயம், தப்பியோடிய சிறைச்சாலை கைதிக்கு, யாழ். நீதிமன்றம் ஆறுமாத கால சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது குறித்த நபர், துவிச்சக்கரவண்டித் திருட்டு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் தடுப்பு காவலில்...

வைக்கப்பட்டிருந்தார். இச்சமயத்தில், சுகயீனம் ஏற்பட்டதன் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ,சிறைக்காவலரின் கவனத்தை திசைதிருப்பி விட்டு தப்பி சென்றார்.

இதனையடுத்து, நான்கு நாட்களின் பின்னர் கடந்த மூன்றாம் திகதி, குறித்த கைதி கொக்குவில், உப்புமடம் பகுதியில் நடமாடுவதாக கிடைத்த தகவலையடுத்து அவர் சிறைக்காவலர்களால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இந்நபர் நேற்று முன்தினம் யாழ்.நீதிமன்றில் முன்நிறுத்தப்பட்டார். குறித்த நபருக்கு ஆறுமாத சிறைத்தண்டணையை வழங்கி, யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராஜா தீர்ப்பளித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top