புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரு சகோதரிகள் மரணமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.கொட்டடி நமசிவாய பாடசாலை ஆங்கில பாட ஆசிரியரான 42வயதுடைய சங்கரப்பிள்ளை சாளினி (கீதாஞ்சலி), யாழ்.கொக்குவில் ஆங்கில பாட ஆசிரியரான
40வயதுடைய சங்கரப்பிள்ளை தனுஜா (சொர்ணலதா) ஆகிய இரு இளம் சகோதரிகளே மரணமடைந்துள்ளனர்.

ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும் மற்றவரின் சடலம் கிணற்றிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு இவர்களின் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில், அவர்கள் இருவரும் நேற்று இரவு தனிமையிலேயே இருந்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று நம்பபடுகிறது. ஆங்கில ஆசிரியைகளான இவர்கள் திருமணம் செய்யாது பெற்றோருடன் இருந்துள்ளனர். சித்திரை வருடப்பிறப்பான நேற்று பெற்றோர் மற்றொரு பிள்ளையின் வீட்டிற்கு சென்ற நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


2ம் இணைப்பு



யாழ்.கோண்டாவில் பகுதியில் பெண் சகோதரிகள் இருவர் இன்று காலை தூக்கிட்டும், கிணற்றில் குதித்தும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.

சகோதரிகளான ச.கீதாஞ்சலி (வயது42), ச.சுவர்ணலதா (வயது40) ஆகிய இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு கீதாஞ்சலி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனினும் நீண்டநேரம் வெளியே வராமையினால் வீட்டில் இருந்தவர்கள் சந்தேகத்தில் அறையை உடைத்து திறந்துள்ளனர்.

அப்போதே கீதாஞ்சலி தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அவரது சகோதரி சுவர்ணலதா வீட்டின் பின்னாலுள்ள கிணற்றில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்

இதேவேளை கீதாஞ்சலி கொக்குவில் இந்துக்கல்லூரி ஆசிரியை எனவும், சுவர்ணலதா கொட்டடி நமசிவாயம் வித்தியாலய ஆசிரியை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தினால் கோண்டாவில் பகுதி அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இதனையடுத்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top