புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஏவுகணை சோதனை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, வட கொரியா அணு குண்டு சோதனை நடத்தும் வாய்ப்பு அதிகளவு உள்ளது என தென் கொரிய அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். வட கொரியா ஏவுகணை மற்றும் அணு குண்டுகளை தயாரித்து வருவதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி
வருகின்றன.



இந்நிலையில் தகவல் தொடர்பு வசதிக்காக செயற்கைகோளை ஏவ போகிறோம் என்று வட கொரியா அரசு அறிவித்தது. இது பொய் செயற்கைகோளை ஏவுகிறோம் என்று சொல்லிவிட்டு, ஏவுகணை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது என்று அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

எனினும் வட கொரியா அரசு நேற்று ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியது. ஆனால் ஏவுகணை வானில் வெடித்து சிதறியது. சோதனை தோல்வியில் முடிந்ததால் வட கொரியா அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

எனவே அடுத்த கட்டமாக அணு குண்டு சோதனையில் ஈடுபடும் வாய்ப்புள்ளது என்று தென் கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட கொரிய தலைவர் கிம் சமீபத்தில் மறைந்தார்.

அவரது 100வது ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும், இராணுவ பலத்தை காட்டும் வகையில் அணு குண்டு சோதனைக்கு வட கொரியா தயாராகி வருகிறது என்று தென் கொரிய பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரிகள் புகார் கூறியுள்ளனர்.

கடந்த 1953ம் ஆண்டு கொரியாவில் ஏற்பட்ட சண்டையில் தென் கொரியா- வட கொரியா என்று இரு நாடுகளாக பிரிந்தன. அப்போதில் இருந்து இரு நாடுகளும் மோதல் போக்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top