விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட தெலுங்கு நடிகை தாரா, இத்தொழிலில் ஈடுபடுத்திய பெண்களுக்கு வாரத்தில் ரூ.15 ஆயிரம் சம்பளம் கொடுத்திருக்கிறார். பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் தாரா சவுத்ரி. இவர் மீது பெண் ஒருவர், கட்டாயபடுத்தி தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக பஞ்சார ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கடந்த மார்ச் 31ம் தேதி தாராவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவது, விஐபிக்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகளிடம் பெண்களை அனுப்பிவைப்பது அவர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது ரகசிய கேமரா மூலம் படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் தாரா ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துளளது. மனைவியுடன் அடிக்கடி மோதலில் ஈடுபடும் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரின் பிடியில் தாரா சிக்கினார். தன்னை நடிகர் விவாகரத்து செய்துவிடுவாரோ என்ற பயத்தில் மனைவியே தாராவை தொடர்பு கொண்டு கணவருடன் நெருக்கமாக பழகும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நடிகர், ‘உன்னை ஹீரோயினாக்கி காட்டுகிறேன் என்று சொல்லி அடிக்கடி அவருடன் உல்லாசமாக இருந் தார். நெருக்கமான திரையுலகினர் சிலரிடமும் தாராவை அனுப்பி வைத்தாராம். விபாசார தொழிலுக்காக ஐதராபாத் மற்றும் கடலோர பகுதியில் வாழும் ஏழை இளம்பெண்களை தாரா தன் வலையில் விழ வைத்தார். அவர்களுக்கு ஆசை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தியதுடன் வாரத்துக்கு ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் கொடுத்தார். நெல்லூரை சேர்ந்த பிரமீளா, குட்கா வியாபாரி ஜெயந்த் மற்றும் ஹனீப் ஆகியோர் தாராவுக்கு உடந்தையாக செயல்பட்டனர். ஜெயந்தின் பங்களாவை தாரா விபசார விடுதியாக பயன்படுத்திக்கொண்டார். அந்த பங்களாவுக்கு தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்களை வரவழைத்து பெண்களுடன் உல்லாசமாக பொழுதை கழிக்க ஏற்பாடு செய்தார். முக்கிய பிரமுகர்களுடன் தான் பேசியதை தாரா ரெக்கார்ட் செய்து வைத்திருந்தார். அந்த டேப்களை போலீசார் கைப்பற்றி, ‘உரையாடல்கள் எல்லாம் உண்மைதானா? என்பதை அறிவதற்கான சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். குண்டூரை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியுடன் தாராவை போட்டோ எடுத்துக்கொள்ள உதவினார். அந்த போட்டோவை காட்டி பலரையும் தாரா மிரட்டி வந்தாராம். பல்வேறு வழக்குகளை தாரா மீது போலீசார் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். நம்பல்லி கோர்ட் 2 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் அளித்துள்ளது என்று தாராவின் வழக்கறிஞர் கபாத்யா ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார். இதற்கிடையே தாராவுடன் நெருக்கமாக இருந்த தெலுங்கு நடிகர் பற்றியும் போலீசார் விசாரிக்கின்றனர். அரசியலில் குதிக்க அந்த நடிகர் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்து:
கருத்துரையிடுக