புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

முதலாம் நூற்றாண்டு காலத்தைய இயேசு கிறிஸ்துவின் கல்லறை ஜெருசலேமில் இருப்பதாக கூறப்பட்டது. கடந்த 1980-ம் ஆண்டில் இது கண்டுபிடிக்கப்பட்டு சர்ச்சையில் உள்ளது. இந்த கல்லறையை தோண்டி ஆய்வு மேற்கொள்ள வடக்கு கலிபோர்னியாவின் அகழ்வாராய்ச்சி நிபுணர்
ஜேம்ஸ் தபோர், டாக்குமென்ட்ரி சினிமா தயாரிப்பாளர் ஜிம்சாஜேகபோவிக் குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதற்கு யூதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து கோர்ட்டில் வழக்கு நடந்தது. முடிவில் இயேசுவின் கல்லறையை தோண்டாமல் காமிராவுடன் கூடிய ரோபோவை கல்லறைக்குள் இறக்கி ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி துளைகள் போடப்பட்டு அதன் வழியாக ரோபோக்கள் பூமிக்குள் இறக்கப்பட்டன. அவை போட்டோக்கள் எடுத்து அனுப்பியுள்ளன. அதில் எலும்புகள், கல்வெட்டுகள் போன்றவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இயேசுவின் எலும்புதானா? என்று ஆராய்ச்சி நடந்து வருகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top