வயலுக்கு மாடு கட்டச் சென்ற சிறுவன் பாம்புக் கடிக்கு இலக்கான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி நுணாவில் மேற்குப் பகுதியினைச் சேர்ந்த இராஜேஸ்வரன் திலக்ஸன் என்ற 15 அகவை சிறுவனே மேற்டிபச் சம்பத்தில் பாம்புக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
நேற்று வீட்டிற்குப் பின்புறமாக உள்ள வயலில் தமது மாடினைக் காட்டுவற்காககொண்டு சென்ற போது அங்கு வைக்கபட்டிருந்த வைக்கோல் கற்றையினுள் இருந்த பாம்பு அச் சிறுவனை தீண்டியுள்ளது.பாம்பு தீண்டியதும் சிறுவன் கத்திச் சத்தமிட்டுள்ளார்.
அச் சத்தத்தினைக் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர் சிறுவனை சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் சேர்த்துள்ளனர்.மேற்படிச் சிறுவனை தீண்டிய பாம்பு நாகபாம்பு என்றும் வைத்திய சாலையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவன் தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக