யாழில் யாழ்ப்பாணம், பலாலி, 2ஆம் குறுக்குத் தெருவிலுள்ள வீட்டுக் கிணறொன்றிலிருந்து சகோதரிகள் இருவரின் சடலங்களை பொலிஸார் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மீட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவ லொன்றுக்கமைய சம்பவ இடத்துக்கு விரைந்த
பொலிஸார்...
பொலிஸார்...
ஷாலினி மற்றும் தனூஜா என்ற இரு சகோதரிகள் இருவரின் சடலங்களையும் மீட்டுள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு குறித்த சகோதரிகளின் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில், அவர்கள் இரவரும் நேற்று இரவு தனிமையிலேயே வீட்டில் இருந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவர்களது மரணம் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பது இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நீதிவானின் மரண விசாரணைகளை அடுத்து அவ்விருவரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக