டோக்கியோ ஜப்பானில் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி, கண்ணில் பட்டவர்களை தாக்கியது. இதில் 2 பெண்கள் பலியாயினர்.பலர் படுகாயம் அடைந்தனர். ஜப்பானின் வட பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து 2 கரடிகள் தப்பின.அவை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. வீடுகளுக்கு அருகே கரடிகள் நடமாடுவதை பார்த்த மக்கள் அலறியடித்து ஓடினர். இந்நிலையில், 2 பெண்களை கரடிகள் பலமாக தாக்கின. இருவரும் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானவர்கள் இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும் வனத்துறையினரும் கடுமையாக போராடி கரடிகளை பொறி வைத்து பிடித்தனர். இரு கரடிகளும் மீண்டும் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன. மிருகங்கள் தப்பிச் செல்லாதபடி ஏற்பாடுகள் செய்யுமாறு பூங்கா நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக