புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

விழுப்புரம் அருகே பள்ளி மாணவி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம். கண்டமங்கலம் கிராமம், முடிதிருத்தம் சமூகத்தை சேர்ந்தவர் கண்ணப்பன். இவரது மகள் வெண்ணிலா (15). பள்ளி மாணவி.

இந்த நிலையில், இக் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சீனி (எ) சிற்றரசன், சிவா மற்றும் இருவர் இணைந்து கடந்த ஏப்ரல் 13 ம் தேதி மாணவி வெண்ணிலாவை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.இந்த தகவல் அறிந்து ஆவேசம் அடைந்த வெண்ணிலாவின் தாய் செல்வி இது குறித்து கண்ட மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகாரை பெற்றுக் கொள்ள காவல் நிலைய அதிகாரிகள் முன்வரவில்லை என்று கூறப்படுகின்றது.

இது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக வெளியான தகவலை அடுத்து மூன்று நாட்களுக்கு பிறகு ஏப்ரல் 16 ம் தேதி அன்று விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவபரிசோதனைக்கு அனுமதித்துள்ளது. அங்கு மாணவி வெண்ணிலாவுக்கு சோதனை நடைபெற்றுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில், பள்ளி மாணவி வெண்ணிலாவை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும், குற்றவாளிகளை பாதுகாப்பு அளித்த கண்டமங்கலம் போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு  பல்வேறு அரசியல் கட்சிகள் தந்தி அனுப்பியுள்ளனர்.

போலீசாரின் இந்த கொடும் செயலுக்கு மனித உரிமை அமைப்புகள் பல கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top