புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

விண்டோஸ் இயங்குதளத்தில் மேற்கொள்ளப்படும் மென்பொருட்களை நிறுவுதல், அகற்றுதல் போன்ற ஒவ்வொரு நடவடிக்யைின் போதும் சில கோப்புக்கள் சேமிக்கப்படுவதுண்டு.அதாவது இணைய உலாவிகளில் சேமிக்கப்படும் Cookies, History, Cache போன்று இயங்குதளத்திலும் கோப்புக்கள்
சேமிக்கப்படும்.

இவ்வகையான கோப்புக்களை நீக்காவிடின் கணினியின் செயற்பாட்டு வேகம் நாளடைவில் மந்தமான நிலையை அடையும். ஆகவே அவற்றை நீக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் East-Tec Eraser 2012 ஆனது பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

39.95 டொலர்கள் பெறுமதியான இம் மென்பொருளை இலவசமாக ஆறு மாதகால லைசன்ஸ் கீயுடன் தற்போது தரவிறக்கம் செய்ய முடியும்.


1. இந்த இணைப்பை பயன்படுத்தி குறித்த தளத்திற்கு செல்லவும்.

2. அத்தளத்தில் கேட்கப்பட்டுள்ள பகுதிகளை நிரப்பி Submit பட்டனை அழுததவும்.

3. தற்போது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி உள்நுழைந்து இரண்டாவது படிமுறைக்கு செல்லவும்.

4. உங்கள் மின்னஞ்சலிற்கு East Technologies என்ற பெயருடன் வந்திருக்கும் மின்னஞ்சலை திறந்து அதில் உள்ள Get Free Key எனும் இணைப்பை அழுத்தவும்.

5.தோன்றும் பகுதியில் Get Free Key for East six months version என்பதைத் தெரிவு செய்தவுடன் தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு செயற்படு நிலையை அடையும். அந்த இணைப்பிலிருந்து மென்பொருள், லைசன்ஸ் கீ என்பவற்றைத் தரவிறக்கம் செய்ய முடியும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top