கனேவல்பொல - கெக்கிராவ பிரதான வீதியின் மான்கடவள பகுதியில் காட்டு யானை தாக்கி மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்து.
இன்று (22) அதிகாலை 5.45 அளவில் இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலில் கணவன் - மனைவி மற்றும் இரண்டு வயது பெண் குழந்தை ஆகியோர் காயமடைந்து கெக்கிராவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.
அண்மைக் காலமாக மான்கடவள பகுதியில் காட்டு யானையின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக வனவள அதிகாரிகளிடம் முறையிட்டுள்ள போதும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக