புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆஸ்திரேலியாவின், மெல்போர்ன் நகரிலுள்ள கிளென் வேவர்லி பகுதியில் இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த நிலேஷ் சர்மா (34), அவரது மனைவி பிரிதிகா (32) அவர்களது குழந்தைகள் திவேஷ் (5), திவ்யா (3) ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த இரண்டு தினங்களாக குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு வராததால்...,

அவர்களது பள்ளி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனை விசாரிப்பதற்காக போலீசார் அவர்களது வீட்டிற்கு சென்றனர். அப்போது நிலேஷ், வீட்டின் முன்தளத்திலும், மற்ற மூவரும் படுக்கை அறையிலும் பிணமாக கிடந்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதனை ஒரு கொலை-தற்கொலை வழக்காகக் கருதி, விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் எவ்வாறு இறந்தனர் என்பதை உறுதிப்படுத்த, 4 பேரின் உடல்களும் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படுகின்றன.



இரு தினங்களுக்கு முன்பு அவர்கள் 4 பேரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொண்டதாகவும், அவர்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லாததால் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை எனவும் உறவினர்கள் கூறிள்ளனர்.

மேலும் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவினால் அவர்கள் பலியாகியிருக்கலாம் எனவும் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top