புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கட்டார் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த கட்டார் அரசுக்குச் சொந்தமான விமானத்தில் போதைப் பொருள் கடத்திவந்த பிலிபைன்ஸ் நாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இவர் நேற்று 1ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.


போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் விமான நிலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த கட்டார் விமானத்தில் வந்த பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த பிலிபைன்ஸ் நாட்டு பிரஜை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர் மலவாயிலில் போதைப் பொருள் கடத்தி வந்துள்ளதாக தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது மலவாயிலில் இருந்து 30 குலி போதைக் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top