புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சீர்காழியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த டி.வி. மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டம் சீர்காழி கீழ மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தனது வீட்டில் இருக்கும் டி.வி. ரிப்பேர் ஆனதால் அதை சரி செய்து கொடுக்குமாறு மெக்கானிக் கடைக்கு போன் செய்தார்.

இதனையடுத்து மறுநாள் அத்தியூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன்(25) என்ற டி.வி மெக்கானிக் அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது மல்லிகா வீட்டில் இல்லை. ஆனால் அவரது 21 வயது மகள் ரோஜா(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஜெயசந்திரன் டி.வி.யை பழுது பார்த்துக் கொண்டே அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தார். திடீரென அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இது குறித்து சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா, எஸ்.ஐ. ராதாபாய் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மெக்கானிக் ஜெயசந்திரனை கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top