நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று 1ம் திகதி இடம்பெற்ற வீதி விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.குருநாகல் - கண்டி பிரதான வீதியில் ஹேவாபொல பிரதேசத்தில் குருநாகலில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த
வானில் மோதி இரு பெண்கள் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
வானில் மோதி இரு பெண்கள் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் 62 மற்றும் 56 வயதுடைய இரு பெண்களே உயிரிழந்துள்ளனர்.வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.இதேவேளை, கனேமுல்ல - மானிலன்லமுவ பகுதியில் கனேமுல்லயில் இருந்து கம்பஹா நோக்கிப் பயணித்த வான் பாதசாரதி ஒருவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த 62 வயதுடைய நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.வானின் சாரதி கைது செய்யப்பட்டு இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.மேலும், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு முன்பாக வான் ஒன்று இருவர் மீது மோதியதில் ஆண், மற்றும் பெண் காயமடைந்துள்ளனர்.
இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் பெண் உயிரிழந்துள்ளார்.குறித்த வானின் சாரதியான பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, தெமடகொட - மேம்பாலத்தில் பயணித்த தனியார் பஸ் ஒன்று ஆண் ஒருவர் மீது மோதியதில் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.
விபத்தை அடுத்து பஸ்ஸின் சாரதி பஸ்ஸை நிறுத்தாமல் சென்றுள்ளார். இன்னும் கைது செய்யப்படவில்லை.மே தினத்தில் பங்கு கொள்ள கொழும்பு வந்த பஸ்ஸே மேதினத்திற்கு கொழும்பு வந்த பத்தேகம பிரதேச நபர் மீது மோதியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக