புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பாம்பு பொதுவாக முட்டையை சாப்பிடும் என்று தான் அறிந்திருக்கிறோம். அதாவது முட்டையை உடைத்து முட்டைக் கருவை குடித்துவிட்டுச் செல்வது வழக்கம் ! கோழி முட்டை மற்றும் பறவைகள் முட்டை என்றால் பரவாயில்லை அதனை உடைத்து குடித்துவிடலாம் ! ஆனால்
மிகவும் கடுமையாக கோதுகளைக் கொண்ட சிலவகையான முட்டைகளை பாம்பால் உடைக்கமுடியாது. அதன் வாயால் அதனைச் செய்வது மிகக் கடினம். இதனால் சில பாம்புகள் தாம் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக்கொண்டு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சரி ஒரு பாம்பு கடுமையான கோதுகளைக் கொண்ட ஒரு முட்டையைக் கண்டால் என்ன செய்யும் ? 

இதோ பாருங்கள், நவீனகாலப் பாம்பை ! முட்டையை அப்படியே விழுங்கிவிடுகிறது. பின்னர் தனது வயிற்று எலும்புகளைப் பாவித்து அம்முட்டையை வயிற்றுப்பகுதில் வைத்தே உடைக்கிறது. முட்டைக்கரு வடுற்றுக்குள் சென்றபின்னர், கோதை மட்டும் அப்படியே கக்கிவிடுகிறது ! பலே பலே ! பாம்பு கூட வர வர தனது மூளையை பாவிக்க ஆரம்பிச்சுட்டுதுடோ !

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top