புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மடிக்கணினியில் ஆபாசப் படம் பார்த்த இருவர் யாழ். நீதி மன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் என அறியப்படுகிறது. ஒருவீட்டில் வைத்து இவர்கள் ஆபாசப் படம் பார்ப்பதாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததாம். இதனையடுத்து சம்பவ இடத்தைப் பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். அங்கே 4 நபர்கள் ஆபாசப்படத்தை பார்த்துகொண்டு இருந்துள்ளனர். பொலிசாரைக் கண்டதும் அவர்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர். நன்றாக ஓடக்கூடிய 2 வர் தப்பிச் சென்றுவிட்டனர். 

ஆனால் 2 பேர் பொலிசாரிடம் சிக்கியுள்ளனராம். இவர்கள் இரண்டு பேரும் கடந்த சனிக்கிழமை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது இவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். ஒருவர் கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பஸ்தவராவார் மற்றவர் நாவலர்துறை வடக்கு, பொம்மை வெளியைச் சேர்ந்தவர் எனவும் அறியப்படுகிறது. மடிக்கணணியில் ஆபாசப்படம் பார்ப்பது மேற்குலக நாடுகளில் ஒன்றும் ஒரு குற்றச்செயல் அல்ல. ஆனால் இலங்கையில் அது எவ்வகையான சட்ட மீறல்களுக்குள் கொண்டுவரப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது என்பதே சிறிது சிக்கலுக்குரியவிடையமாக உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top