புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வன்னியம்பட்டி அருகே உள்ள தொட்டியபட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜ். இவரது மனைவி பூச்சம்மாள் (வயது20). இவர்கள் சம்பவத்தன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.நள்ளிரவில் முத்துலிங்காபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சுந்தரம் (வயது27) என்பவர் பாண்டியராஜ் வீட்டிற்கு நைசாக உள்ளே நுழைந்து கணவன் அருகே தூங்கி கொண்டிருந்த பூச்சம்மாளை மானபங்கபடுத்த முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பூச்சம்மாள் கூச்சலிட்டார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த பாண்டியராஜ், சுந்தரத்தை பிடிக்க முயன்றார். ஆனால் சுந்தரம் தப்பி ஓட முயன்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாண்டியராஜ் சுந்தரத்தை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து வன்னியம்பட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து பெண்ணை மானபங்கப்படுத்த முயன்ற கூலி தொழிலாளி சுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top