புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த வீரப்பன்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் வயது-43,. இவரது மனைவி பெயர் சிகப்பு மல்லி வயது-35. கூலி தொழிலாளிகளான இவர்களுக்கு ஆர்த்தி வயது-15 என்ற மகளும், அரவிந்த் வயது-13 என்ற மகனும் உள்ளனர்.

சொக்கலிங்கமும், சிகப்பு மல்லியும் சென்னையில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தனர். அப்போது, சிகப்பு மல்லிக்கு பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால், கடந்த ஓராண்டுக்கு முன் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினர்.

இந்நிலையில் சிகப்புமல்லி மட்டும் கோவையில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். அங்கும் அவருடன் பல ஆண்கள் “கள்ளத்தொடர்பு” வைத்திருந்தது சொக்கலிங்கத்துக்கு தெரிந்தது.

அதிர்ச்சி அடைந்த சொக்கலிங்கம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் மனைவியை கோவையில் இருந்து சொந்த ஊருக்கு அழைத்து வந்தார்.

இது தொடர்பாக தம்பதியர் இடையில் தொடர்ந்து தகராறு நடந்து வந்தது. நேற்று முன்தினம் இருவரும் வீட்டின் வெளியில் படுத்து தூங்கினர். அதிகாலை 4.30 மணிக்கு கள்ளக்காதல் தொடர்பாக இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம் அடைந்த சொக்கலிங்கம், சிகப்பு மல்லியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் வேப்பம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சம்பத் முன்னிலையில் சரண் அடைந்தார். சம்பத் சொக்கலிங்கத்தை விசாரித்த பின்னர் போலீஸில் ஒப்படைத்தார். போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top