புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

டுபாயில் தான் பணிபுரியும் வீட்டில் பொருள் கொள்ளையில் ஈடுபட்ட இலங்கை பணிப்பெண் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.வழங்கப்பட்டுள்ள 6 மாத கால சிறைத்தண்டனை முடிந்ததும் குறித்த இலங்கைப் பெண் நாடு கடத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 15 நாட்களுக்குக்குள் தன்மீதான சிறை தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்ய குறித்தப் பெண்ணுக்கு வாய்ப்புள்ளதென டுபாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டுபாயில் தான் பணிபுரிந்த வீட்டில் இருந்த முதியவர் மற்றும் சிறுவன் ஆகியோர் முகத்தில் ஒருவகை அமிலத்தை வீசி அவ்வீட்டில் இருந்த தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்ததாக இலங்கைப் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

31 வயதுடைய இலங்கைப் பெண் இவ்வாறு பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top