புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

14 வயது சிறுமியொருவர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த சம்பவமொன்று மாத்தளை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இவ்விரு குழந்தைகளும் ஆண் குழுந்தைகளாகும்.இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து கலேவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

கலேவல, தேவஹுவ பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சிறுமி, தனது பெற்றோரின் சம்மதத்துடன் காதலருடன் குடித்தனம் நடத்தியுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top