ஒவ்வொரு வருடங்களும் செல்லச் செல்ல மக்களின் மனதில் பதிந்திருக்கும் விடயங்களும் மாற்றம் பெற்று வருகின்றன.பல பேரை பாலியல் துணையாக வைத்திருக்கின்றமையில் சிங்கப்பூர் நாட்டின் தற்போதைய இளம் தலைமுறையினர்பேரார்வம் காட்டி வருகின்றனர்
என அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
என அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
ஒன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் இருந்து இப்பரபரப்பான விடயம் வெளிவந்து உள்ளது.
Singapore Planned Parenthood Association என்கிற அமைப்பு இக்கருத்துக் கணிப்பை நடத்தி உள்ளது. ஜூலை மாதத்துக்கும் நவம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் 2010 ஆம் ஆண்டில் இக்கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.
16 வயதுக்கும் 66 வயதுக்கும் இடைப்பட்ட 1281 சிங்கப்பூர்க்காரர்கள் கருத்துக் கணிப்பில் உள்வாங்கப்பட்டு இருந்தனர்.
அண்மைய காலங்களில் சிறுவயதிலேயே சிங்கப்பூர்க்காரர்கள் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர் என்றும் பல பேரை பாலியல் துணையாக வைத்திருக்கின்றமையில் தவறு கிடையாது என்று அரைவாசிக்கும் அதிகமான சிங்கப்பூர்க்காரர்கள் சிந்திக்கின்றனர் என்றும் கணிப்பின் முடிவு கூறுகின்றது.
அத்துடன் திருமணத்துக்கு முந்திய பாலியல் உறவில் நம்பிக்கை வைத்திருக்கின்ற சிங்கப்பூர்க்காரர்களின் எண்ணிக்கைகூட அதிகரித்துச் செல்கின்றது என்றும் 71 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் துணைவர் கன்னி கழியாதவராக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இல்லாதவர்களாக உள்ளார்கள் என்றும் கணிப்பின் முடிவு சுட்டிக் காட்டுகின்றது.
இவ்வாறு பயங்கரமான பல திடுக்கிடும் தகவல்களை கருத்துக் கணிப்பின் முடிவு கொண்டிருக்கின்றது. ஒட்டுமொத்தத்தில் பாலியல் விடயத்தில் இன்றைய சிங்கப்பூர்க்காரர்கள் தாராளவாத கொள்கையை கொண்டிருக்கின்றனர் என்பது உறுதிப்பட தெரிய வந்திருக்கின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக