புதுக்கோட்டை அருகே உள்ள அண்டகுளம் பறவயல் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் சதீஷ் (வயது 24). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராசு மகள் பாண்டீஸ்வரி (21). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர் ஆனால் இவர்களது காதலை பெற்றோர் எதிர்த்ததால் கடந்த ஜனவரி மாதம் சதீஷ், பாண்டீஸ்வரி தனது நண்பர்கள் உதவியுடன் பெரம்பலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திரும ணம் செய்தனர். அதன் பின்னர் வீட்டிற்கு தெரியா மல் அலைபாயுதே சினிமா பாணியில் அவரவர் வீட்டில் வசித்து வந்தனர்.
இதனை அறியாமல் கடந்த மார்ச் மாதம் முதல் பாண்டீஸ்வரி வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித் தனர். அதிர்ச்சி அடைந்த காதல் ஜோடி கேரளாவுக்கு தப்பி சென்றது. அதனை தொடர்ந்து பாண்டீஸ்வரி உறவினர்கள், அவரை செல்போனில் தொடர்பு கொண்டு நீ விரும்பிய வாலிபருடன் முறைப்படி திருமணம் செய்து வைக்கிறோம்.
எனவே எங்களுடன் வாருங்கள் என்று கூறி ஊருக்கு அழைத்து வந்தனர். அங்கு காதல் ஜோடியை பஞ்சாயத்து பேசி பிரித்தனர். நேற்று மாலை பாண்டீஸ் வரியின் தாய்மாமன் ஜெய் சங்கர் சதீஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு சதீசிடம் நீ எப்படி எனது அக்காள் மகளை கடத்தி சென்று திருமணம் செய்யலாம் என்று கூறி தகராறு செய்தார்.
இதனால் இருவருக்கும் இடையே மோதல் உருவானது. ஆத்திரம் அடைந்த ஜெய்சங்கர் தான் மறைத்து வைத்திருந்த கத்தி யால் சதீசை சரமாரியாக குத்தினார். இதனை தடுத்த சதீசின் தம்பி சுரேசுக்கும் கத்திக் குத்து விழுந்தது. இதில் அண்ணன்- தம்பி 2 பேரும் ரத்த வெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந்தனர்.
இதனை பார்த்த ஜெய்சங்கர் அங்கி ருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் இறந்தார். சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து உடையாளிப் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய்சங்கரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக