புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சட்டவிரோத கருக்கலைப்பு நிலையமென்றில் கருக்கலைப்பு செய்த குடும்பப் பெண்ணொருவர் அதிகமான இரத்தப்போக்கு காரணமாக மரணமாகியுள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு மரணமானவராவார்.

இவர் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திருமணமாகி இரண்டு வருடங்களான இப்பெண்ணிற்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் மேற்படி யுவதி கருவுற்று 5 மாதங்களான நிலையிலேயே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளார்.இந்நிலையில் இது தொடர்பாக யாழ்.பொலிஸார் யாழ்.நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த சட்டவிரோத கருக்கலைப்பு நிலையத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ். பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top