புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மகாராஷ்டிராவில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த ஆந்திர மாணவியை சக மாணவர்களில் ஒருவர் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள சுக்கர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் கோமல்(19). அவர் மகாராஷ்டிராவில் உள்ள நாந்தேடுவில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். அந்த கல்லூரியில் படிக்கும் நாந்தேடு மாவட்டம் மத்கேட்டைச் சேர்ந்த பிரதீப்(20) என்பவர் கோமலை காதலித்துள்ளார். அவர் தனது காதலை தெரிவித்தபோது கோமல் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரி வளாகத்தில் கோமலைப் பார்த்த பிரதீப் அவரிடம் வந்து தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் கோமல் அவரது காதலை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோமலின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பிரதீப் அந்த கத்தியை வைத்து தனது கையில் உள்ள நரம்புகளை அறுத்து கோமலி்ன் உடல் அருகே விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோமலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு போராடிய பிரதீப்பை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் பிரதீப் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top