புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


 மட்டக்களப்பு  வெல்லாவெளி இலங்கை வங்கிக் கிளையில் போலி நாணயத்தாள்களை வைப்பிலிடச் சென்ற ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்கள் வங்கி வெல்லாவெளிக் கிளைக்கு நேற்று முன்தினம் மாலை சென்ற குறித்த நபரிடம் போலி நாணயத் தாள்கள் இருப்பதை  வங்கி முகாமையாளர் கண்டுபிடித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

உடன் குறித்த இடத்துக்கு  விரைந்த வெல்லாவெளி பொலிஸார், சந்தேகநபரை கைது செய்ததோடு அவரிடம் இருந்து 2000 ரூபா போலி நாணயத்தாள்கள் இரண் டையும் ஆயிரம் ரூபா தாள்கள் ஆறையும் கைப் பற்றியுள்ளனர்.

குறித்த நபர் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.இதேவேளை, மாவத்தகம வைத்தியசாலைக்கு அருகில் 500 ரூபா போலி நாணயத்தாளுடன் ஒருவர் நேற்றுமுன்தினம்  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றுமுன்தினம் பிளெஸ்ஸ நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top