மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடல் ஆமைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த குழுவினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு நேற்றுக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸ் நிலைய சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவு இவர்களைக் கைதுசெய்தது.
மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சர் லால் செனவிரட்னவின் ஆலோசனையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கிங்ஸ்லி குணரெட்ணவின் வழிகாட்டலின் கீழ் சென்ற சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஜயசுந்தர தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவர்களைக் கைதுசெய்துள்ளனர்.
கடலில் அருகிவரும் உயிரினமாகவுள்ள இந்தக் கடலாமைகளைப் பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் இவற்றைப் பிடித்து விற்பனைசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட வியாபாரி உட்பட மூவர் அடங்கிய குழுவினரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து சுமார் 120 கிலோ பெறுமதியுடைய கடலாமைகள் மற்றும் அவற்றினைப் பிடிப்பதற்கும் விற்பனைசெய்வதற்கும் பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் வனஇலாகா அதிகாரிகளின் பரிசோதனையின் பின்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக