பேஸ்புக்கில் தன்னை பற்றி ஆபாசமாக எழுதியதால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் ரக்ஷா (18). இவருக்கு ஒரு வயது இருக்கும்போது, இவரது பெற்றோரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். தாக்குதல்
நடத்திய நேரத்தில் ரக்ஷாவும், அவரது அக்காவும் வீட்டில் இல்லை. எனவே இருவரும் உயிர் பிழைத்தனர். தாய், தந்தையரை இழந்த இருவரும் ஜம்முவில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தனர். பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் விடுதியில் தங்கி ரக்ஷா படித்து வந்தார்.
இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் லவ்பிரீத்துடன் ரக்ஷாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அதன்பிறகு ரக்ஷா, லவ்பிரீத்துடன் பேச்சை நிறுத்தினார். இதனால் லவ்பிரீத்தும் அவரது நண்பர் தீபக்கும், ரக்ஷா பற்றி பேஸ்புக்கில் ஆபாசமாக எழுதினர். இதைபார்த்த அவர் கடும் அதிர்ச்சியும் அவமானமும் அடைந்தார். விடுதியில் நேற்றிரவு நீண்ட நேரமாக ரக்ஷாவின் அறை திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகமடைந்த மாணவிகள் கதவை தட்டி பார்த்தனர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, மின்விசிறியில் தூக்கு போட்டு ரக்ஷா சடலமாக கிடந்தார். அங்கு அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், தனது சாவுக்கு காரணம் லவ்பிரீத், தீபக் என எழுதியிருந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக