பிரான்சின் பாரிஸ் விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை திருடியதாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ரோஸி சார்லஸ் டி கவ்லி விமான நிலையம் உள்ளது.
இங்கு ஜோக்னஸ்பர்க், வாஷிங்டன், நியூயார்க் ஆகிய பகுதிகளிலிருந்து விமானங்களில் வரும் பயணிகளின் பெட்டிகள் கிடங்கில் அடுக்கி வைக்கப்படும்.
இந்த கிடங்கில் கண்காணிப்பு கமெரா பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கமெரா இல்லாத ஒதுக்கு புறமான பகுதிகளில் உள்ள பெட்டிகளிலிருந்து நகைகள், துணிகள், தோல் பொருட்கள் போன்றவை திருடு போனது தெரியவந்தது.
இத்திருட்டு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேகம் எழுந்த மற்ற 9 பேரின் வீடுகளில் சோதனையிட்ட பொலிஸ் அதிகாரிகள், அவர்களையும் கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக