பிரித்தானியா மீன் மார்க்கெட்டில் பாகிஸ்தானிய வியாபாரி ஒருவர் வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு பாட்டு பாடி வியாபாரம் செய்கிறார்.பிரித்தானியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கென்ட் நகரத்தில் அமைந்திருக்கும் குயின்ஸ் மார்க்கெட்டில் முகமது ஷாகித் நசீர் என்பவர் மீன் வியாபாரம் செய்கிறார்.
கடந்த ஆண்டு தான் ஷாகித் லண்டனுக்கு வந்தார். அந்த மார்க்கெட்டிலேயே இவரது கடையில் தான் விற்பனை அதிகமாம்.
காரணம் யாரையும் இவர் அழைப்பதில்லை, மாறாக ஏராளமான சினிமா மற்றும் பொப் பாடல்களை பாடுகிறார்.
அந்த பாடல் வரிகளில் மீன்களின் பெயர்களையும் விலையையும் சேர்த்து ராகமாக பாடுவதால் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோத தொடங்கி விட்டது.
மீன் வாங்க வருபவர்களை விட இவரது பாட்டை கேட்க வருபவர்கள் அதிகமாக உள்ளனர்.
இந்த மீன் மார்க்கெட்டுக்கு அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா நாட்டினரும் வருகின்றனர்.
ஆங்கிலத்தில் மீன் பாட்டு பாடும் நசீரை, பலர் படம் எடுத்து யூ டியூப் இணைய தளத்தில் ஒளிபரப்பியுள்ளனர்.
மீன் மார்க்கெட்டில் நசீர் பாடும் பாடலை இதுவரை இணையதளத்தில் 36 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக