புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கேரளாவில் சமீபகாலமாக 'காமுக' தந்தைகளின் கைது நடவடிக்கை தொடர் கதையாகிவருகிறது. கண்ணூர் மாவட்டத்தைத் தொடர்ந்து கோட்டயத்தில் தமது இரு மகள்களை கற்பழித்த புகாரின் பேரில் காமுக தந்தை ஒருவர் கைது
செய்யப்பட்டிருக்கிறார்.

கண்ணூர் மாவட்டம் தர்மதோமில் சில நாட்களுக்கு முன்பு 13 வயது மாணவி ஒருவரது புகாரின் பேரில் அவரை கற்பழித்த தந்தை, அண்ணன் மற்றும் தாய்மாமன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கோட்டயம் மாவட்டம் கடூர்துருத்தியில் ஹோட்டல் தொழிலாளி ஒருவரின் மனைவி போலீசில் புகார் கொடுத்தார். அதில் தமது 13 மற்றும் 15 வயது மகள்களை கடந்த 2 ஆண்டுகளாக தமது கணவனே கற்பழித்துக் கொடுமை செய்து வருவதாக அவர் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்த ஹோட்டல் தொழிலாளி தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

தொடரும் காமுக தந்தைகளின் கைது பற்றி கருத்து தெரிவித்த மாநில உள்துறை அமைச்சர் திருவாச்சூர் ராதாகிருஷ்ணன், இந்த இரண்டு சம்பவங்களிலும் கூடுதல் விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கேட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top