புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இலங்கை பணிப் பெண்ணொருவரை பங்களாதேஷ் பிரஜைகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சம்பவமொன்று குவைத்தில் இடம்பெற்றுள்ளது என அதிர்வு
இணையம் அறிகிறது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குவைத்தில் இலங்கை பணிப்பெண்ணொருவர் தனியாக வீதியில் சென்றுகொண்டிருந்த போது அவ்வழியாக காரில் வந்த 3 பங்களாதேஷ் பிரஜைகள் குறித்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். ஒரு பாலைவனத்திற்கு கடத்திச் சென்ற மூன்று நபர்கள், பல முறை என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர். பின்னர் அவர்கள் மது அருந்திக்கொண்டிருந்த போது நான் தப்பித்து வந்து விட்டேன்... என குவைத் பொலிஸாரிடம் மேற்படி பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து குவைத் பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. குவைத் நாட்டில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக பாரதூரமான சட்டங்கள் உண்டு. இதனை மீறுபவர்களுக்கு சிலவேளைகளில் மரண தண்டனை கூட வழங்கப்படுவதும் உண்டு. இதனையும் மீறி இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளமை பெரும் அதிர்சியை தோற்றுவித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top