புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இத்தாலியில் வகுப்பறையில் 2 முயல்களை கொன்று பாடம் நடத்திய ஆசிரியருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியை சேர்ந்தவர் கார்லோ ரேண்டோ, இவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு அனாடமி(உடற்கூறுவியல்) பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.


அப்போது 2 முயல்களை கத்தியால் அடித்து கொலை செய்து, அதை அறுத்து உடற்பாகங்களை காட்டி மாணவர்களுக்கு பாடம் நடத்தியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விலங்குகள் பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனாடமி பாடம் நடத்துவதற்காக ஆசிரியர் கார்லோ 4 முயல்களை வாங்கி உள்ளார்.

இதில் இரண்டு முயல்களை தப்பி ஓடின. அவற்றை துரத்தி பிடித்த ஆசிரியர், கத்தியால் குத்தி அடித்து கொலை செய்துள்ளார்.

பின் அதன் உடற்பாகங்களை எடுத்து மாணவர்களுக்கு விளக்கி காட்டி உள்ளார். இது காட்டுமிராண்டி தனமானது என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கில் ஆசிரியருக்கு 8 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விலங்குகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த பயாலஜிஸ்ட் மைக்கேல் குவான் கூறுகையில், அனாடமி வகுப்புகளில் விலங்குகளை அறுத்து பாகங்களை விளக்கும் முறை இல்லை. இது தேவை இல்லாதது. இதுபோன்ற கொடூரமான செயல்களை ஏற்க முடியாது என்று கூறியுள்ளா

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top